பி . வி. எம் குளோபல் பள்ளியில் திசம்பர் 11 பாரதியார் பிறந்த நாள் தமிழ் நாளாகக் கொண்டாடப்பட்டது . காலை வழிபாட்டுக் கூட்டத்தினை மாணவத் தலைவர்கள் ஒருங்கிணைத்தனர் . வழிபாட்டினைத் தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பும் ஒரு நிகழ்ச்சியினை வழங்கினர் முதலில் பரதக்கலையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாரதி , ஔவையார் , மற்றும் வள்ளுவர் போல் வேடமணிந்து திருக்குறள் , கொன்றை வேந்தன் போன்றவை நயம் பட உரைத்தனர் . பாரதியை நம் கண் முன் நிறுத்தியதைப் போல் ஐந்தாம் வகுப்பு மாணவன் மகிழனின் உரை அனைவரையும் கவர்ந்தது .மூன்றாம் வகுப்பு மாணவர்கள் செந்தமிழ் நாடெனும் என்ற பாரதியின் பாடலைக் குழுவாகப் பாடினர் . தமிழின் சிறப்பினை ஆறாம் வகுப்பு மாணவிகள் கலந்துரையாடலாய் கவிநயத்துடன் எடுத்துரைத்தனர் . இயல் , இசையில் வியக்க வைத்த பின்பு தமிழ்க்கடவுள் எனும் தலைப்பில் ஔவையின் சுட்ட பழம் சுடாத பழம் கதையினை நிகழ்த்தி நாடகத்தமிழையும் அரங்கேற்றினர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் தமிழன் எனும் பாடல் தமிழ் உள்ளங்கள் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்தது.
அன்றைய நாளின் பிறந்த நாள் மாணவர்களுக்கு வாழ்த்துப் பாடல் தமிழிலேயே பாடப்பட்டது .இறுதியாக வாழ்க தமிழ் ... வெல்க தமிழ் என்ற முழக்கத்துடன் விழா நிறைவடைந்தது.
தமிழ்த்துறை