BVM GLOBAL @ COIMBATORE

News & Events

Latest Posts

Project Day 2023 Dec 9 2023
Robotics -AI Competition Dec 14 2022
DEAR PROGRAMME Nov 7 2022
Investiture Ceremeony 2022 Jun 27 2022
Aksharabhyasam 2022 Apr 6 2022

Guest Lecture - Tamil

நமது பி.வி.எம் குளோபல் பள்ளி. கோவையில் 16.12.17 அன்று காலை 11 மணியளவில் தமிழ்துறை சார்பில் ஒருங்கிணைக்கப் பட்ட பாரதியும் வாழ்வும் என்னும் தலைப்பில் சிறப்பு விரிவுரை நடைபெற்றது. திருவாளர் சௌந்தரராஜன் Msc.B.Ed;MBA, அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார். 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான நம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நம் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி செல்வி.நிதர்சனா சிறப்பு விருந்தினரை வரவேற்றுப் பேசினாள். பின் பாரதியும் வாழ்வும் என்னும் தலைப்பில் திருவாளர் சௌந்தரராஜன் சொற்பொழிவு ஆற்றினார்.அவரின் தெள்ளு தமிழ்ப்பேச்சும், மேற்கோள் வரிகளும் பாரதியின் ஆளுமையை நம் கண்முன்னே கொணர்ந்தது. எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவி செல்வி.நித்யபாரதி பூங்கொத்தும் நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தாள்.இறுதியில்10-ம் வகுப்பு மாணவி செல்வி.பிரதிக்ஸா நன்றியுரை வழங்க, சிறப்பு விரிவுரை இனிதே நிறைவு பெற்றது. 

©2023 BVM Global, All rights reserved.