திசம்பர் 11 ஆம் நாளாகிய பாரதியாரின் பிறந்தநாளை ஒவ்வோர் ஆண்டும் நம் பி.வி.எம் குளோபல் பள்ளியில் தமிழ் நாளாகக் கொண்டாடுவது வழக்கம் .அவ்வண்ணம் இந்த ஆண்டும் 11.12.2020 – பாரதியார் பிறந்தநாள் மிகச்சிறப்பான முறையில் இணைய வழியில் கொண்டாடப்பட்டது .
இவ்விழாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் மிக ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.காலை வழிபாட்டுக்கூட்டத்தில் பாரதியாரின் சிறப்புரை மிகவும் திண்ணிய நெஞ்சத்தையும் , நேர் கொண்ட பார்வையையும் வெளிப்படுத்தியது .
மேலும் மாணவச்செல்வங்களின் கலைநிகழ்ச்சிகளாக வள்ளுவன் வருகை , ஔவையின் வாக்கு , பாரதி கூற்று , புரட்சிக்கவியின் சிந்தனை , பரதக்கலை ,கிராமிய மற்றும் பாரதியின் பாடல்கள் , சேர மன்னனின் செந்தமிழ் பேச்சாற்றல் போன்ற நிகழ்வுகள் அரங்கேறின
இந்நிகழ்ச்சிகளால் புலன்களுக்கு இன்பம் கிட்டியதுடன் புதுமை புத்துணர்வு கிடைக்கப் பெற்றது.தமிழ் அவமானமல்ல அடையாளம் எனும் தாரக மந்திரத்தை எடுத்துரைத்து விழா இனிதே நிறைவுற்றது .
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்
Click the below link for the programme video:
https://fb.watch/2kgKDC7S0g/